அதிகளவு கரும்புகையை வெளியிடும் வாகனங்களைவீடியோ எடுத்து பொலிஸ் WhatsApp – 070 3500525ற்கு அனுப்புங்கள்

அதிகளவு கரும்புகையை வெளியிடும் வாகனங்களைவீடியோ எடுத்து பொலிஸ் WhatsApp – 070 3500525ற்கு அனுப்புங்கள்

வீதிகளில் அதிகளவு கருப்பு புகையை வெளியிடும் வாகனங்களை இனங்கண்டு, அவற்றுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

இவ்வாறான வாகனங்கள் தொடர்பாக ஏற்கனவே பொலிஸாருக்குப் பல புகார்கள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காற்று மாசுபாடு என்பது உலகளாவிய ரீதியில் ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதோடு, இதன் காரணமாக ஆண்டுதோறும் சுமார் ஒரு மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையைத் தணிக்க, மோட்டார் வாகன ஆய்வாளர்களுடன் இணைந்து அதிக கருப்பு புகையை வெளியிடும் வாகனங்களைச் சோதனையிட்டு, அவற்றைப் பொலிஸ் பொறுப்பில் எடுத்துச் சட்டத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், வீதிகளில் இவ்வாறான வாகனங்கள் பயணிப்பதைக் கண்டால், அது குறித்துப் புகார் அளிக்கப் பொதுமக்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

புகார் அளிப்பதற்கான WhatsApp இலக்கம் – 070 3500525

குறித்த வாகனத்தின் இலக்கம் அல்லது வீடியோ காட்சிகளை இந்த இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும். அவ்வாறு பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )