போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு மீன்பிடி படகு தெற்கு கடல் பகுதியில்

போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு மீன்பிடி படகு தெற்கு கடல் பகுதியில்

இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் பொதிகளை ஏற்றிச் சென்ற உள்நாட்டு இழுவை படகு ஒன்று நான்கு சந்தேக நபர்களுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையின் நீண்டதூர கண்காணிப்பு கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த படகு சுற்றிவளைக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், குறித்த மீன்பிடி படகு மற்றும் சந்தேகத்திற்கிடமான பொதிகள் என்பன மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் தற்போது கரைக்கு கொண்டு வரப்பட்டு வருவதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )