மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு 97,500 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெயுடன் முதலாவது கப்பல் நாளை இலங்கை வருகை

மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு 97,500 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெயுடன் முதலாவது கப்பல் நாளை இலங்கை வருகை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மோதல்கள் ஆரம்பமானதன் பின்னர், கச்சா எண்ணெயுடன் வரும் முதலாவது கப்பல் நாளை (17) நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை கனிம எண்ணெய் களஞ்சிய முனைய நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பல் மூலம் 97,500 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் நாட்டிற்கு கொண்டு வரப்படுவதாக அதன் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி மயூ ர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

அத்துடன், இம்மாத இறுதியில் மற்றுமொரு கப்பலும் இலங்கையை வந்தடையவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இது குறித்து அவர் கூறுகையில்:

“யுத்த சூழ்நிலைக்குப் பிறகு இலங்கைக்கு வரும் முதலாவது கச்சா எண்ணெய் கப்பல் 97,500 மெட்ரிக் தொன் எண்ணெயுடன் நாளை நாட்டை வந்தடையும். அத்துடன் இந்த மாத இறுதியில் மேலும் ஒரு கப்பல் வரவுள்ளது. அதேபோல், அமெரிக்காவிலிருந்து வரவுள்ள WTI கச்சா எண்ணெய் கப்பலில் தற்போது எண்ணெய் ஏற்றப்பட்டு வருகின்றது. அது இன்றைய தினம் இலங்கையை நோக்கிப் பயணிக்க ஆரம்பிக்கலாம். இதன் மூலம் இதுவரை காலமும் இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்குப் பெரும் பிரச்சினையாக இருந்த கச்சா எண்ணெய் விநியோகத்தைப் உறுதிப்படுத்துவதில் நிலவிய சிக்கல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.” என முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி மயூ ர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )