வெலியோயாவில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியைக் கொலை செய்த கணவன்

வெலியோயாவில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியைக் கொலை செய்த கணவன்

கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட மோதல் முற்றியதில், கணவன் தனது மனைவியைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்துள்ளார்.

இன்று (17) அதிகாலை அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போதே இக்கொலை இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலியோயா, யூ.டி.கே பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த இப் பெண், மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கை வந்து கலகா, புப்புரஸ்ஸ பகுதியிலுள்ள கணவரின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் தனது பிள்ளையுடன் வெலியோயா தேயிலைத் தோட்டத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

மனைவி மீண்டும் தன்னுடன் வர மறுத்ததால், அவரை அழைத்துச் செல்ல நேற்று (16) கணவன் அங்கு சென்றுள்ளார்.

இதன்போது, அப்பகுதி இளைஞர் ஒருவருடன் தனது மனைவிக்குக் கள்ளக்காதல் இருப்பதாக அந்த ஊர் மக்கள் கணவனிடம் கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கணவன், கள்ளக்காதலை நிறுத்துமாறு மனைவியுடன் நேற்று மாலை முதல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இன்று அதிகாலை மனைவி தூங்கிக் கொண்டிருந்த போது அவரைத் தாக்கிப் படுகொலை செய்துள்ளார்.

30 வயதுடைய சந்தேகநபரான கணவன் மற்றும் கள்ளக்காதலன் எனச் சொல்லப்படும் நபர் ஆகிய இருவரையும் வட்டவளை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )