அரசாங்கம் பெரும்பான்மையுடன் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாலும், இறுதியில் மக்கள் எதிர்ப்பிற்கு முன்னால் தலை வணங்க நேர்ந்தது

அரசாங்கம் பெரும்பான்மையுடன் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாலும், இறுதியில் மக்கள் எதிர்ப்பிற்கு முன்னால் தலை வணங்க நேர்ந்தது

தற்சமயம் நாட்டில் வலுச்சக்தித் துறையில் பெரும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் தரமற்ற நிலக்கரி பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதனை ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ச்சியாக தரவுகளுடன் அறிவியல் பூர்வமாகவும் தகவல்களின் அடிப்படையிலும் முன்வைத்து வந்தது.

இருந்த போதிலும் அரசாங்கம் குறித்த நிலக்கரி தரமானது என்றே தெரிவித்து வந்தது. மின் உற்பத்தி நிலையத்தின் ஆவணங்களில் காணப்படும் தகவல்கள் மற்றும் தரவுகள் பொய்யானவை என்று அரசாங்கம் கூறியது. இதனை நியாயப்படுத்த ஆளும் தரப்பைச் சேர்ந்தோர் வரிசைக்கு ஊடகங்களுக்கு வந்து வியாக்கியானம் கொடுத்தனர்.

இறுதியில் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தனது வலுச்சக்தி அமைச்சரை நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் காப்பாற்றும் பொருட்டு உரை பல்வேறு விடயங்களை முன்வைத்து, உரை நிகழ்த்தி, தரமற்ற நிலக்கரி கொடுக்கல் வாங்கள்களை உறுதிப்படுத்தும் வகையிலும், அந்த செயல்முறையை மேலும் நியாயப்படுத்தும் வகையிலுமாகச் செயற்பட்டார்.

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் வெற்றி பெற்றது. அரசாங்கத்திற்கு 153 வாக்குகள் கிடைத்தன.

உண்மை தான். ஆனால் மக்களின் வலுவான எதிர்ப்புகளுக்கும் அதிருப்திகளுக்கும் முன்னால், ஊழல் நிறைந்த நிலக்கரி செயல்முறையை கண்டிக்கும் வகையில் வெளிப்பட்ட மக்கள் எதிர்ப்பிற்கு முன்னால் அமைச்சரும் செயலாளரும் இராஜினாமா செய்ய வேண்டி நேர்ந்தது.

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் இந்த நிலக்கரி ஒப்பந்தம் சரியானது என்று கூறியபோதும், தரமற்ற நிலக்கரி குறித்து எதிர்க்கட்சி தொடர்ந்து சாட்சிகளுடன் தேவையான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போகும் நிலைமையை நிரூபித்து வந்தது.

இறுதியில், அரசாங்கம் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வென்றாலும் மக்கள் எதிர்ப்பின் முன்னால் வலுச்சக்தி அமைச்சரும் செயலாளரும் இராஜினாமா செய்ய வேண்டிய நிலை வந்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மக்களை சரியான தரவுகள் மற்றும் தகவல்களுடன் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான தரப்பு மக்களை தெளிவூட்டியதாலயே இந்த மாற்றம் நடந்தது. தற்சமயம் நாட்டின் வலுச்சக்தித் துறையில் பல பிரச்சினைகள் எழுந்து காணப்படுகின்றன. புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு அரசாங்கம் பேரடியைக் கொடுத்துள்ளது.

சூரிய சக்தி (Solar Energy) மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளை விரிவுபடுத்து, முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக அவர்களை விரட்டுவதற்கு இந்த அரசாங்கம் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

திஸ்ஸமஹாராம சுதுவெலி பெளஸ்ஸ பிரதேசத்தில் இன்று (20) இடம்பெற்று வரும் புதுவருட விளையாட்டு விழாவில் பங்கேற்றதைத் தொடர்ந்து, அந்தரகஸ்வெவ ரணசிங்க பிரேமதாச பிரிவேன விகாரையின் விகாராதிபதி கிருலப்பனை சுத்தம்ம தேரரைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கம் எரிபொருள் மாபியாவின் நெருங்கிய பங்காளராக மாறிவிட்டது.

இன்றைய நிலவரப்படி, தற்போதைய அரசாங்கம் எரிபொருள் மாபியாவிற்கு இரையாகி அவர்களுக்கு கீழ்படியும் கூட்டாளியாக மாறியிருக்கிறது. HSBC நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் நமது நாடு எரிபொருட்களை கொள்வனவு செய்து கொண்ட விலைகள் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அவர் காட்டும் வகையில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது அதிகமான தொகை எரிபொருளுக்காக செலவிடப்பட்டிருக்கின்றன. அதிக பிரீமியத்தைச் (அரசு நிர்ணயித்த நிலையான விலையை விட கூடுதலான தொகை) செலுத்தி கொள்வனவு செய்துள்ளது. அவ்வாறே, இந்த அரசாங்கம் டீசலுக்கு செலுத்தும் கொள்வனவு விலை யாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பினார்.

அரசாங்கம் மின்சார பாவனையாளர்களைப் போலவே எரிபொருள் நுகர்வோரையும் பாதிப்பில் ஆழ்த்தியுள்ளது.

நமது நாட்டின் எரிபொருள் நுகர்வோரே இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

75 இலட்சம் மின்சார பாவனையாளர்களினது உரிமைகள் மீறப்பட்டதைப் போலவே, சர்வதேச யுத்த மோதலொன்று நடைபெற்று வரும் தருணத்தில் உருவான நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியிலும் நமது நாட்டின் எரிபொருள் நுகர்வோருக்கு அரசாங்கம் கடுமையான அநீதிகளை இழைத்து வருகின்றது.

மத்திய கிழக்கு போர்ச்சூழலுக்கு மத்தியிலும் உலகில் பல நாடுகள் எரிபொருள் மீதான வரியை குறைத்து நுகர்வோரை பாதுகாத்துள்ளது. தமது மக்களை பாதுகாத்துள்ளது.

தற்போதைய அரசாங்கம் வரிக்கு மேல் வரிகளை விதித்துக் கொண்டே போகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

துறைமுகத்தில் இறக்குமதி செய்யும் விலைக்கே எரிபொருட்களைத் தருவோம் என்று வாக்குறுதி வழங்கிய இந்த அரசாங்கம், செய்தது ஒன்றுமில்லை.

துறைமுகத்தில் இறக்குமதி செய்யும் அதே விலைக்கே மக்களுக்கு எரிபொருட்களைப் பெற்றுத் தருவோம் என்று வாக்குறுதி வழங்கிய இந்த அரசாங்கம், இன்று செய்தது ஒன்றுமில்லை.

இன்று இருப்பதற்கு மேலதிகமாகவும் வரிகளை விதித்து, எரிபொருட்களின் விலைகளை கூட்டி வருகின்றது. அதோடு மத்திய கிழக்கு போர்ச்சூழல் நிச்சயமற்ற தன்மையை பயன்படுத்தி அதிக விலையில் எரிபொருட்களை இறக்குமதி செய்து மக்களை துன்புறுத்து வருகின்றது.

இந்த விடயம் கூட இப்போது வெளிப்பட்ட நிலையில் அரசாங்கம் இவ்வாறே தனது வலுச்சக்திக் கொள்கையை முன்னெடுத்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மின்சார பாவனையாளர்களைப் போலவே எரிபொருள் நுகர்வோரையும் பாதிப்பில் ஆழ்த்தாதீர்கள்.

நாட்டில் காணப்படும் ஒரே மாற்று அரசாங்கமாக இந்த எரிபொருள் கொள்முதலை வெளிப்படையான அடிப்படையில் மேற்கொண்டு, நாட்டு மக்களுக்கு நேர்மையான எரிபொருள் கொள்கையை முன்னெடுக்க ஐக்கிய மக்கள் சக்தியினரான நாம் நடவடிக்கை எடுப்போம்.

நிலக்கரி மூலம் 75 இலட்சம் மின்சார பாவனையாளர்களை அநாதரவாக்கியதைப் போலவே எரிபொருள் கொள்முதலில் இத்தகைய செயல்களை மேற்கொண்டு எரிபொருள் நுகர்வோரையும் பாதிப்பில் ஆழ்த்தும் ஊழல் செயல்களை செய்யாமல் இருக்கும்படி அரசாங்கத்திடம் நாம் கேட்டுக்கொள்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )