உலக அமைதிக்காக தேரர்கள் நடைப்பயணம் ; பாதையோரங்களில் பக்தர்கள் பெரும்திரள்

உலக அமைதிக்காக தேரர்கள் நடைப்பயணம் ; பாதையோரங்களில் பக்தர்கள் பெரும்திரள்

உலக அமைதி வேண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அமைதிக்கான நடைப்பயணம் நேற்று (22) காலை தம்புள்ளை ரஜமகா விகாரை வளாகத்தில் இருந்து தொடங்கியது.

திட்டமிட்டபடி, முதல் நாளில் சுமார் 45 கிலோமீட்டர் தூரத்தை நடைப்பயணக் குழு வெற்றிகரமாக கடந்தது. பின்னர் மாத்தளை அலுவிஹாரையை தேரர்கள் குழு சென்றடைந்தது.

இந்த நடைப்பயணத்தில் பங்கேற்ற தேரர்கள் மற்றும் குழுவினரை தரிசிக்க பாதையோரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

தேரர்களின் பயணம் சிரமமின்றி நடைபெறுவதற்காக, வீதியெங்கும் வாழை இலைகளை விரித்து வைத்ததுடன், கடும் வெயிலால் சூடான பாதையை குளிர்விக்க மக்கள் குளிர்ந்த நீரை தெளித்து உதவினர்.

இந்த நிகழ்வு பக்தர்களின் உற்சாகத்தையும், உலக அமைதிக்கான ஆதரவையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )