
கரந்தெனிய பிரதேச சபை தவிசாளர் காலமானார்
கரந்தெனிய பிரதேச சபைத் தவிசாளர் மஹீல் முனசிங்க இன்று (21) காலமானார்.
இன்று காலை உடற்பயிற்சி செய்யும் போது மயங்கி விழுந்த நிலையில் கரந்தெனிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட மஹீல் முனசிங்க, கரந்தெனிய பிரதேச சபையின் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

