பிரதி அமைச்சர் மதுரா செனவிரத்ன பயணித்த கார் விபத்து

பிரதி அமைச்சர் மதுரா செனவிரத்ன பயணித்த கார் விபத்து

கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுரா செனவிரத்ன பயணித்த கார் விபத்துக்குள்ளானது.

நேற்று இரவு (22), கொழும்பிலிருந்து ஹட்டன் வழியாக நுவரெலியா நோக்கிப் பயணித்தபோது, கித்துல்கல – களுக்கோகு சமவெளிப் பகுதியில் அவரது கார் சறுக்கி, பிரதான சாலையருகே இருந்த மின்கம்பத்தில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் அமைச்சர் அல்லது ஓட்டுநருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், காருக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கித்துல்கல பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )