பலாங்கொடையில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு

பலாங்கொடையில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு

பலாங்கொடை – பல்லேவெல பகுதியில் உள்ள வீடொன்றில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டில் தனியாக வசித்த பெண் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்திருக்கலாம் என ஆரம்ப விசாரணைகளில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர், நேற்று (23) பிற்பகல் அந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவத்தையடுத்து சந்தேக நபரை தேடும் நடவடிக்கையில் இரத்தினபுரி பொலிஸ் மோப்ப நாய் பிரிவு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பிரேத பரிசோதனை இன்று (24) பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பின்னவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )