தந்தை செல்வாவின் 49ஆம் ஆண்டு நினைவேந்தல்

தந்தை செல்வாவின் 49ஆம் ஆண்டு நினைவேந்தல்

தமிழ் அரசியல் வரலாற்றின் முக்கிய தலைவரான S. J. V. செல்வநாயகம் அவர்களின் 49ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26) காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்க வளாகத்தில், தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் தலைவர் ஐயர் சு. ஜெபநேசன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வு ஆரம்பத்தில், சதுக்கத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது, பின்னர் அவரது சமாதியிலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் சி.வி.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், ஆனந்த சங்கரி உள்ளிட்ட அரசியல் மற்றும் சமூக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தந்தை செல்வாவின் அரசியல் பங்களிப்புகளையும், தமிழ் மக்களுக்கான அவரது அர்ப்பணிப்பையும் நினைவுகூர்ந்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )