நிதி செயலாளர் இல்லம் முன் ஆர்ப்பாட்டம் ; போராட்டக்காரர்கள் மீது சாணி வீச்சு

நிதி செயலாளர் இல்லம் முன் ஆர்ப்பாட்டம் ; போராட்டக்காரர்கள் மீது சாணி வீச்சு

நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும அவர்களின் இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற குழுவினருக்கு அப்பகுதி மக்களால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்த நிலையில், அங்கு திரண்டிருந்த சிலர் அவர்களை இலக்கு வைத்து முட்டை மற்றும் சாணம் வீசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அந்தப் பகுதியில் திடீர் பரபரப்பு நிலவியது.

இந்தச் சம்பவத்தையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை உருவாகி பதற்றமான சூழல் ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவரின் தனிப்பட்ட இல்லம் முன்பாக இவ்வாறு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )