
போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது
தெனிப்பிட்டிய பகுதியில் மருத்துவ மையத்துக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாகக் கூறப்படும் 765 போதை மாத்திரைகளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கடலோர பொலிஸார் மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை பிரதிநிதிகள் இணைந்து நேற்று (28) மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண், கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளுடன் தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
CATEGORIES Sri Lanka

