
கொழுப்பு கல்லீரல் குறித்து மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டில் நகர்ப்புறங்களில் வாழும் மக்களில் சுமார் 30 முதல் 32 வீதமானோர் கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக பதுளை போதனா மருத்துவமனையின் இரைப்பை குடல் விசேட நிபுணர் தெரிவித்துள்ளார்.
உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் உடல் உழைப்பின்மை ஆகியவை இந்நோயின் முக்கிய காரணிகளாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்லீரலில் அதிக அளவில் கொழுப்பு படிவது நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் போன்ற நோய்களுடன் நெருங்கிய தொடர்புடையதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை பின்பற்றுதல், சமநிலையான உணவுப் பழக்கங்கள் மற்றும் முறையான மருத்துவ சிகிச்சை ஆகியவற்றின் மூலம் இந்நோயை கட்டுப்படுத்தவும் குணப்படுத்தவும் முடியும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

