
994 கிலோ உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கைது
புத்தளம் – பாலாவி பகுதியில் பெருந்தொகை உலர்ந்த மஞ்சளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் பாலாவி பகுதியில் வீதி சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 994 கிலோ 150 கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையதாக 34 வயதுடைய நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
CATEGORIES Sri Lanka

