
போரை முடிவுக்குக் கொண்டு வர ஈரானிடமிருந்து அமெரிக்காவிற்கு புதிய முன்மொழிவு
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான புதிய முன்மொழிவு ஒன்றை பாகிஸ்தானிய மத்தியஸ்தர்கள் ஊடாக அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில் இந்த புதிய நிலை குறித்து தெரிவிக்கப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி உடன்பாடு எட்டப்பட்டது.
எனினும், மிகவும் நிலையான அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

