மாலைத்தீவு ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு

மாலைத்தீவு ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு

மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கைக்கு வருகை தந்த மாலைத்தீவின் ஜனாதிபதி மொஹமட் முய்ஸு அவர்களை வரவேற்கும் அரச உத்தியோகபூர்வ விழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்விற்குப் பின்னர், இரு நாடுகளின் தலைவர்களும் இணைந்து கூட்டு பத்திரிக்கை அறிக்கை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவது குறித்து, மாலைத்தீவின் ஜனாதிபதி , ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் நோக்கில், இரு நாடுகளின் பொதுவான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், அவரது பயணத்தின் போது பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், 2023 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், மொஹமட் முய்ஸு மேற்கொள்ளும் முதல் இலங்கை பயணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )