
கனமழையால் தெஹியோவிட்ட கல்வி வலயத்தின் 6 பாடசாலைகள் மூடல்
சீரற்ற வானிலை மற்றும் கனமழையை முன்னிட்டு, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட ஆறு பாடசாலைகளை இன்று (22) மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ருவன்வெல்ல பகுதியில் மூன்று பாடசாலைகளும், தெஹியோவிட்ட பகுதியில் மேலும் மூன்று பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதுடன், மாணவர்களை பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்புமாறு வலயக் கல்விப் பணிப்பாளர் அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், தற்போதைய காலநிலை நிலவரத்தை கருத்தில் கொண்டு, ஏனைய பாடசாலைகளை நடத்தலாமா அல்லது விடுமுறை வழங்கலாமா என்பது தொடர்பான தீர்மானத்தை சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களே எடுக்கலாம் என தெஹியோவிட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் எச்.எல். ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.

