
மாவை சேனாதிராஜாவின் இறுதிக்கிரியைகள் இன்று !
மறைந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல்குழுவின் சிரேஷ்ட தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் இறுதிக்கிரியைகள் இன்றையதினம் (02) நடைபெறவுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தனது 82ஆவது வயதில் கடந்த புதன் கிழமை இரவு காலமானார்.
இந்தநிலையில், மாவிட்டபுரத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னாரின் பூதவுடலுக்கு நேற்றைய தினம் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே, இன்று காலை மாவிட்டபுரத்திலுள்ள அன்னாரின் இல்லத்தில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்று, அதன் பின்னராக இரங்கல் உரையைத் தொடர்ந்து, தச்சங்காடு இந்து மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

