
மாணவர்கள் பகிடிவதை குறித்து தெரிவிக்கபல்கலைக்கழகங்களுக்கு அதிகாரிகள் நியமிப்பு
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை குறித்து தெரிவிக்க ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் ஒரு அதிகாரியை நியமிக்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
பகிடிவதையை எதிர்கொள்ளும் ஒரு மாணவர்கள் தமது பிரச்சனைகளை தெரிவிக்கும் வகையில் பல்கலைக்கழக
நிர்வாக சபையுடன் இணைக்கும் வகையில் இந்த அதிகாரி நியமிக்கப்படுவார் என்று பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து விவாதிக்க அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடல் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்
பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் நடைபெறவுள்ளது.
இதேவேளை , சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவரின் மரணம் தொடர்பான விசாரணைகள் குறித்தும் பிரதி அமைச்சர் விளக்கமளித்தார்.

