இந்தியாவுக்கு அறிவுறுத்துங்கள், முஸ்லிம் நாடுகளிடம் பாகிஸ்தான் பிரதமர் வேண்டுகோள் !

இந்தியாவுக்கு அறிவுறுத்துங்கள், முஸ்லிம் நாடுகளிடம் பாகிஸ்தான் பிரதமர் வேண்டுகோள் !

இந்திய பாகிஸ்தான் நாடுகளிடையே ஏற்பட்டுள்ள போர்
பதற்றத்தைத் தணிக்க சவூதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் வேண்டுகோளொன்றை விடுத்துள்ளார்.

பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்த சம்பவத்தையடுத்து, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கிடையில் மோதல் ஏற்படுவதற்கான பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் குவைத் தூதா்களை நேற்று சந்தித்தார்.

‘மோதல் ஏற்படுவதற்கான பதற்றத்தைத் தவிர்க்க இந்தியாவுக்கு அறிவுறுத்துமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் கோரிக்கை விடுத்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான செய்திகளில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ‘பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் மீது இந்தியா சுமத்தும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது எனவும் இந்த சம்பவத்தில் வெளிப்படையான, பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை நடத்துவதே சரியானது எனவும் அனைத்து விதமான பயங்கரவாதத்தையும் எதிர்ப்பதாக பாகிஸ்தான் தெரிவிக்கிறது.

கடந்த 15 மாதங்களில் சவூதி அரேபியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் உதவியோடு பொருளாதார சரிவில் இருந்து மீட்டுள்ளதாகவும் தற்போது பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு பொருளாதார வளா்ச்சியை சீா்குலைக்கும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்ளாது எனவும் பாகிஸ்தானுக்கு தொடா்ந்து ஆதரவளிக்கும் சகோதர நாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பாகிஸ்தான் கூறியதாக அந்நாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )