இறுதி தேர்தல் பிரசார காணொளி மற்றும் விபரங்களை வெளியிடுவதில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடு ,

இறுதி தேர்தல் பிரசார காணொளி மற்றும் விபரங்களை வெளியிடுவதில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடு ,

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது .

எதிர்வரும் 6ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ,இன்று நள்ளிரவிற்கு பிறகு உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக எந்தவொரு வேட்பாளரும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்று இடம்பெறும் இறுதி தேர்தல் பிரச்சார கூட்டங்களின் காணொளி மற்றும் மேலதிக விபரங்களை தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் பிரதான ஒரு செய்தியில் மாத்திரம் வெளியிட முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திட்டுள்ளது .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )