பாராளுமன்றம் பற்றி எழுதப்பட்ட 2 நூல்கள் பிரதமரிடம் கையளிப்பு

பாராளுமன்றம் பற்றி எழுதப்பட்ட 2 நூல்கள் பிரதமரிடம் கையளிப்பு

இலங்கை பாராளுமன்றம் பற்றி நந்தசிரி ஜாசன்துலியன எழுதிய “Darkness at daybreak” மற்றும் சட்டத்தரணி நிஹால் செனவிரத்னவினால் எழுதப்பட்ட ” Memories of 33 years in Parliament ” ஆகிய இரண்டு நூல்கள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் கடந்த 15ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

இந்த இரண்டு நூல்களும் இலங்கை பாராளுமன்றம் பற்றி எழுதப்பட்ட நூல்களாகும். நுலாசிரியர்களுள் ஒருவரான சட்டத்தரணி நிஹால் செனவிரத்ன பாராளுமன்ற செயலாளர் நாயகமாக 17 வருடங்கள் சேவையாற்றியுள்ளதுடன், 33 வருட சேவைக் காலத்தில் தனது அனுபவங்களைக் கொண்டு “Memories of 33 years in Parliament ” என்ற நூலை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் திருமதி தனுஷ்கி லியனபடபெந்தியும் கலந்துகொண்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)