யாழில் சுமந்திரன் தலைமையில் தமிழரசுக்கட்சி வேட்புமனு தாக்கல்

யாழில் சுமந்திரன் தலைமையில் தமிழரசுக்கட்சி வேட்புமனு தாக்கல்

யாழ். உள்ளூராட்சிமன்ற தேர்தலில் 12 சபைகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (20) யாழ் மாவட்ட செயலகத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலகர் பதில் ம.பிரதீபன் முன்னிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் 11.00 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

இங்கு நேற்று (19) 05 பிரதேச சபைக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டதுடன், இன்று 12 மாநகர, நகர, பிரதேச ஆகிய சபைகளுக்கான வேட்புமனுதாக்கல் செய்யப்பட்டது. மொத்தமாக 17 சபைகளுக்கான முதன்மை வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்.

யாழ்.உள்ளூராட்சிமன்ற தேர்தலில் 17 சபைகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று மதியம் 12.00 மணிக்கு நிறைவடைந்தது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )