பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதிகரித்த சிக்குன்குனியா

பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதிகரித்த சிக்குன்குனியா

பல வருடங்களுக்குப் பிறகு கொழும்பு மற்றும் கோட்டை பகுதிகளில் சிக்கன்குன்யா நோய்ப் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நுளம்பு பெருக்கம் காணப்படும் இடங்களை அகற்றுவதன் மூலம் மட்டுமே சிக்குன்குன்யா பரவலைக் கட்டுப்படுத்த முடியுமெனவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்த நோய் தற்போது ஆபிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டங்கள் முழுவதும் பரவும் ஒரு நோயாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

சிக்கன்குன்யா வைரஸ் பாதிக்கப்பட்ட நுளம்பு கடிப்பதன் மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது, மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட பயணிகளிடமிருந்து பாதிக்கப்படாத பகுதிகளுக்கு பரவக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )