
சிமெந்தில் தயாரிக்கப்பட்ட முடி வண்ண பொருட்கள் பறிமுதல்
மட்டக்குளியில் உள்ள முடி வர்ணம் தீட்டும் பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையில் நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) சோதனை நடத்தி, பல அசுத்தமான பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளது.
சோதனையின் போது, சிமெந்து துகள் உள்ளிட்ட பொருத்தமற்ற பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட முடி வர்ணம் தீட்டும் பொருட்களை CAA அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
மனித பயன்பாட்டுக்குப் பொருத்தமற்ற சேதமடைந்த மற்றும் காலாவதியான பொருட்களைப் பயன்படுத்தி குறித்த தொழிற்சாலை முடி வர்ணம் தீட்டும் பொருட்களை உருவாக்கியமை கண்டறியப்பட்டது.
தொழிற்சாலையில் இருந்து ரூ. 28 மில்லியன் மதிப்புள்ள அசுத்தமான பொருட்களை CAA அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka

