இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டித்து நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டித்து நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்

பலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கண்டித்து இன்று (18) நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

‘பெரிய வெள்ளிக்கிழமை அர்த்தமுள்ளதாக்குவோம் ‘ என்ற தொனிப் பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தை ‘கித்துசர ‘ அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

18 மாதம் மாத காலமாக தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கப்பட்டது.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு எதிரான சுலோக பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கத்தோலிக்க, இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் மூவின மக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

image
image
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )