ஆசிய இளையோர் மெய்வல்லுநர் போட்டியில் தங்கம் வென்றார் தருஷி அபிஷேகா

ஆசிய இளையோர் மெய்வல்லுநர் போட்டியில் தங்கம் வென்றார் தருஷி அபிஷேகா

18 வயதுக்குட்பட்ட ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று (18) நடைபெற்ற தடகளப் போட்டியில் தருஷி அபிஷேகா தங்கப் பதக்கம் வென்றார்.

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் 2 நிமிடங்கள் 14.86 வினாடிகளில் போட்டியை முடித்து தருஷி தங்கப் பதக்கத்தை தனதாக்கினார்.

இதுதவிர, நேற்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஷவிந்து அவிஷ்க வெண்கலப் பதக்கம் வென்றார்.

1 நிமிடங்கள் 53.41 வினாடிகளில் தனது பந்தயத்தை முடித்த அசிந்த வெண்கலப் பதக்கத்தை தனதாக்கினார்.

மேலும் , ஆண்கள் உயரம் தாண்டுதல் போட்டியில் பவன் நெத்ய சம்பத் (2.03 மீ) வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )