இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை, புத்தளம் மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். 

இதேவேளை மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )