
போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனந்தகம பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையானது நேற்று (26) பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அகரவிட்ட பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடமிருந்து 80 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

