
உள்ளூராட்சி தேர்தல் ; ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேர்தல் பிரசார நடவடிக்கை முன்னெடுப்பு
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை இலக்காக கொண்டு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேர்தல் பிரசார நடவடிக்கை இன்று (30) யாழ்.மருதணார்மடம் சந்தை பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சந்தை பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த பிரசார நடவடிக்கையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் வேட்பாளருமான கருணாகரன் தர்சன், கட்சியின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
பிரதீபன்

