முகமது அஸ்மான் ஷெரிப்தீன் என்ற சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

முகமது அஸ்மான் ஷெரிப்தீன் என்ற சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

முகமது அஸ்மான் ஷெரிப்தீன் என்ற சந்தேக நபரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்.

இந்த சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 071 8591637 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு சீதுவ போலீஸ் அதிகாரிக்கோ அல்லது 0112 253 522 என்ற இலக்கத்தினூடாக சீதுவ பொலிஸ் நிலயத்திற்கோ தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் திகதி, சீதுவ பொலிஸ் பிரிவின் லினஹேமுல்ல, சீதுவ பகுதியில், மோட்டார் வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் , அப்பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்தார் .

இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு T-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக
பொலிஸாரார் தெரிவித்தனர் .

இந்த சம்பவம் குறித்து சீதுவை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதன் அடிப்படையில் ,இந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபர் தற்போது அந்த பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

சதேகநபர் , ரந்தோலுகம ,, கட்டுவன வீதி, ஹோமாகம, என்ற முகவரியில் வசிக்கும் முகமது அஸ்மான் ஷெரிப்தீன் என்பவர் என போலீசார் தெரிவித்துள்ளனர் .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )