இலவச கல்வியின் ஊடாக நவீன கல்வி வழங்கப்பட வேண்டும்

இலவச கல்வியின் ஊடாக நவீன கல்வி வழங்கப்பட வேண்டும்

இலவசக் கல்வி மூலம் நாட்டின் சிறார்களுக்கு நவீன கல்வியை வழங்குவது நம் அனைவரின் பொறுப்பாகும். உலகின் மிகவும் அபிவிருத்தி கண்ட நாடுகளைப் பார்க்கும்போது, ​​அந்த நாடுகளின் கல்வி முறைகள் மிகவும் வலிமையானவை என்பதைக் காண்கிறோம்.

அங்கு புதுமைகள் மற்றும் நவீனம் காலத்துக்கு காலம் உட்புகுத்தப்படுகின்றன. சர்வதேச தொழிலாளர் சந்தைக்கு ஏற்ற பாடத்திட்டத்தை உருவாக்குவதாலும், புதிய கல்வி முறைகள் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு நவீன கல்வியை வழங்குவதாலும், அபிவிருத்தி கண்ட நாடுகள் கல்வித் துறையில் உச்சத்தை எட்டியுள்ளன.

பின்லாந்து, தென் கொரியா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இதற்கு மிகச் சிறந்த உதாரணங்களாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மாத்தறை உராபொல ஸ்ரீ ரத்தனஜோதி பிரிவேனா வித்யாயநதத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடந்து வரும் கல்வி மற்றும் கலாச்சார கண்காட்சியில் நேற்று (13) பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார். இங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )