புதிய போப் ஆக பதவி ஏற்றார் ராபர்ட் பிரெவோஸ்ட்

புதிய போப் ஆக பதவி ஏற்றார் ராபர்ட் பிரெவோஸ்ட்

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் (88), கடந்த மாதம் 21-ம் திகதி உடல்நலக் குறைவால் காலமானார்.

புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கி முதல் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதற்கிடையே, 2-வது முறையாக கார்டினல்கள் கூடி புதிய போப்பை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு நாள் இழுபறிக்குப் பிறகு புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்டார். வாடிகனில் உள்ள தேவாலயத்தின் சிம்னியில் இருந்து வெள்ளை புகை வெளியேறியது.

புதிய போப் ஆக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் போப் ராபர்ட் பிரிவோஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், புதிய போப் பதவியேற்பு விழா இன்று (19) நடைபெற்று வருகிறது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பதவி ஏற்கும் நிகழ்வு, வாடிகன் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நிகழ்வில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் 14ம் போப் ஆக பதவியேற்றுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )