
ரயில் மோதி இளைஞர் ஒருவர் பலி
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவப்பங்கேணியில் இன்று (08) ரயில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருவப்பங்கேணி, அரோஸ் வீதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

