
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புற்றுநோய்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பைடன் சிறுநீர் பிரச்னை தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவரை சந்தித்துள்ளார்.
அப்போது அவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த புற்றுநோய் அவரின் எலும்புகளுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து பைடனும், அவரது குடும்பத்தினரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களுடன் தொடர்ந்து ஆலோசித்து செய்து வருகின்றனர்.
புற்றுநோய் தீவிரமாக இருந்தாலும் அதனை குணப்படுத்த முடியும் என்று குடும்பத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

