கொழும்பின் பல பகுதிகளில் 12 மணிநேர நீர்விநியோக தடை

கொழும்பின் பல பகுதிகளில் 12 மணிநேர நீர்விநியோக தடை

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (25) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலான 12 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, கொழும்பு நகரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க, தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அந்தவகையில், கொழும்பு 1 முதல் 15 வரை, கோட்டை, கடுவெல, பத்தரமுல்ல, கொலன்னாவை, கொட்டிகாவத்த, முல்லேரியாவ, ஐடிஎச், மகரகம, தெஹிவல, கல்கிஸ்ஸ, இரத்மலானை மற்றும் மொரட்டுவ ஆகிய பகுதிகளில் குறித்த நீர்விநியோக தடை ஏற்படும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )