பலத்த காற்றில் கார் மீது முறிந்து விழுந்த பாரிய மரம்
கொழும்பு சிட்டி சென்டர் வர்த்தக வளாகத்திற்கு அருகிலுள்ள வீதி பகுதியில் பயணித்த கார் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது .
இந்த அனர்த்தம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
மரம் முறிந்து விழுந்ததில் காரின் முன் பகுதி சேதமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சீரற்ற வானிலை காரணமாக ஏற்படும் அனர்த்தங்களிருந்தது தம்மை பாதுகாத்து கொள்ள வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
CATEGORIES Sri Lanka

