
அனர்த்தங்கள் தொடர்பில் 117க்கு அழைக்குமாறு அறிவிப்பு!சீரற்ற வானிலையால் 4,623 பேர் பாதிப்பு
சீரற்ற வானிலையால் 13 மாவட்டங்களைச் சேர்ந்த 104 பிரதேச செயலகப் பிரிவுகளில் 4,623 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் துணை இயக்குநர் ரவி ஜெயரத்ன தெரிவித்தார்.
இந்த மோசமான வானிலையால் கம்பஹா மாவட்டம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று காலை நிலவரப்படி 327 குடும்பங்களைச் சேர்ந்த 1,278 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் .குறிப்பிட்டுள்ளார்
கொழும்பு மாவட்டத்தில் 32 இடங்களில் மரங்கள் முறிவு மற்றும் மின்கம்பிகள் அறுந்துள்ளதாக ரவி ஜெயரத்ன தெரிவித்தார்.
நாடு முழுவதும் சுமார் 1,184 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
வீடுகளுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுவதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை இயக்குநர் தெரிவித்தார்.
முப்படைகள், போலீசார் , மாவட்ட செயலக அதிகாரிகள், தீயணைப்பு சேவைகள் துறை மற்றும் சிவில் பாதுகாப்பு துறை ஆகியவை தற்போது மீட்பு பணிகளை முன்னெடுத்துள்ளன
இதேவேளை மின்சாரத்தை தடைகளை சரிசெய்யும் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக ரவி ஜெயரத்ன சுட்டிக்காட்டினார்.
சீரற்ற காலநிலையால் பாதிப்புக்கள் தொடர்பில் 117 என்ற எண்ணுக்கு அழைக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.

