
சீரற்ற காலநிலையால் மின் தடை குறித்த 50,000 முறைப்பாடுகள் பதிவு
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நேற்று இரவு 8:00 மணி வரை மின் தடை குறித்த 50,000 முறைப்பாடுகள் கிடைத்தததாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது
இவற்றில் சுமார் 14,030 மின்தடைகள் சரிசெய்யப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.
ஏனைய மின் தடைகளை விரைவாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், , முறைப்பாடு வழங்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் நாடு முழுவதும் அந்த மின் தடைகளை மீட்டெடுக்க இலங்கை மின்சார சபை செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அதிக முறைப்பாடுகள் மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் பெறப்பட்டுள்ளதாக பொறியாளர் தம்மிக விமலரத்னவும் கூறினார்.
இவற்றில், மத்திய மாகாணத்தில் பதிவான 15,000 மின் தடைகளில் 5,300 மற்றும் மேற்கு மாகாணத்தில் பதிவான 10,000 மின் தடைகளில் 1,700 சரிசெய்யப்பட்டுள்ளதாக பொறியாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.
சீரற்ற காலநிலையால் ஏற்படும் மின்தடைகள் குறித்த முறைபாடுகளுக்கு 1987 எண்ணுக்கு அழைக்குமாறு இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.

