
2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்ற ஓபல் சுசதா சுவாங்ஸ்ரி
இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் சம்மேளன மத்திய நிலையத்தில் 72வது உலக அழகி போட்டி நேற்று (31) நடைபெற்றது.
இதில் 2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓபல் சுசதா சுவாங்ஸ்ரி வென்றுள்ளார்.
இதில் இலங்கை சார்பாகப் போட்டியிட்ட அனுதி குணசேகர, இறுதி 40 இடங்களுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்திருந்தார்.
72வது உலக அழகி போட்டியில் அண்மையில் நடைபெற்ற போட்டிகளில் அனுதி குணசேகர சிறப்பான செயல்திறனைக் காட்ட முடிந்ததுடன், அவர் நேரடியாகவும் மற்றும் மல்டிமீடியா பிரிவுகளிலும் இறுதிச் சுற்றுகளுக்குத் தகுதி பெற முடிந்தது.
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அந்தப் பிரிவுகளில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இலங்கைப் போட்டியாளர் என்ற பெருமையையும் அனுதி குணசேகர பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

