கடலோர ரயில் சேவையிலிருந்து விலகுவதற்கான தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

கடலோர ரயில் சேவையிலிருந்து விலகுவதற்கான தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

கடலோர ரயில் சேவையில் இருந்து இன்று (06) நண்பகல் 12 மணி முதல் விலகுவதற்கான தீர்மானத்தை லோகோமோட்டிவ் இயக்க பொறியியலாளர்கள் சங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

இன்று காலை ரயில்வே பொது முகாமையாளருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் நேர்மறையான பதில் கிடைத்ததையடுத்து, இந்தத் தீர்மானத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க குறித்த சங்கம் முடிவு செய்துள்ளது.

கடலோர ரயில் மார்க்கத்தில் உள்ள சமிக்ஞை அமைப்பின் குறைபாட்டிற்கு தீர்வு காணக் கோரி, இன்று நண்பகல் 12 மணி முதல் சேவையில் இருந்து விலக சங்கம் முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )