ஒரு தொகுதி பீடி இலைகளுடன் 4 பேர் கைது

ஒரு தொகுதி பீடி இலைகளுடன் 4 பேர் கைது

கடற்படை புலனாய்வு பிரிவு வழங்கிய தகவலுக்கு அமைவாக கடற்படை மற்றும் மன்னார் மதுவரி நிலைய அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது இன்று (6) காலை நடுக்குடா கடற்கரை பகுதியில் வைத்து ஒரு தொகுதி பீடி இலை மூட்டைகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படை புலனாய்வு பிரிவு வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில் மது வரி ஆணையாளர் நாயகத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக கடற்படையினர் மற்றும் மன்னார் மதுவரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி டி.பி.அளவத்தகம தலைமையிலான மது வரி அதிகாரிகள் இணைந்து இன்று (6) காலை மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,நடுக்குடா கடற்கரை பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன் போது சந்தேகத்திற்கிடமான இரண்டு படகுகளில் காணப்பட்ட பொதிகளை சோதனை செய்த போது குறித்த படகுகளில் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பீடி இலைகளை மீட்டனர்.

WhatsApp Image 2025 06 06 at 10.36.17 AM (1)

குறித்த இரு படகுகளில் இருந்தும் 40 மூடைகளில் பொதி செய்யப்பட்ட சுமார் 1250 கிலோ பீடி இலைகள் இவ்வாறு மீட்கப்பட்டது.மேலும் குறித்த படகுடன் கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த 4 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

மீட்கப்பட்ட பீடி இலை மூடைகள் கடற்படையின் உதவியுடன்,மன்னார் மது வரி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் மீட்கப்பட்ட இரண்டு படகுகளின் வெளி இணைப்பு இயந்திரங்கள் மற்றும் ஏனைய பொருட்களும் இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களையும் கடற்படையினர் மன்னார் மதுவரி நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.மேலதிக விசாரணைகளை மன்னார் மதுவரி நிலைய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )