மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை

மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை

மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதால் , பல பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

மெய்தி இனத்தை சேர்ந்த அரம்பாய் தெங்கோல் என்ற குழுவின் தலைவர் கண்ணன் சிங் உள்பட 6 பேரை மணிப்பூர் பொலிஸார், நேற்று (07) இரவு கைது செய்தனர்.

இதை எதிர்த்து மெய்தி மக்கள் போராட்டம், வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையை தடுக்க பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டனர். இதனால், மணிப்பூரில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

அதேவேளை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிப்பூரில் 5 மாவட்டங்களில் இணையதள சேவை நேற்று (07) இரவு 11.45 மணி முதல் துண்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், தவுபல், பிஷ்ணுபூர், காக்சிங் ஆகிய 5 மாநிலங்களில் 5 நாட்களுக்கு இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த 5 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி – குகி இனக்குழுக்களுக்கு இடையே கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் முதல் மோதல் வெடித்துள்ளது. இந்த மோதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )