
வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் பதினான்கு தோட்டாக்களுடன் ஒருவரை தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தலவத்து கொட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் நடத்தி வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

