
கம்பஹாவில் 10 மணி நேர நீர் வெட்டு
கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை மறுதினம் (11) காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை 10 மணி நேர நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இந்த நீர் வெட்டு , பேலியகொட, வத்தளை, ஜா-எல, சீதுவ நகர சபை பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டான, மினுவங்கொடை பிரதேச சபை பகுதி மற்றும் கம்பஹா பிரதேச சபை பகுதியின் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்படவுள்ளது.
பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நிறுவப்பட்ட சூரிய மின்சக்தி அமைப்பை மேம்படுத்துதல் மற்றும் பிரதான அமைப்புடன் இணைப்பதன் காரணமாக நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

