
பேருவளை பொலிஸ் அதிகாரிகள் மூவர் குழுவினரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி
பேருவளை பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் பொசொன் தினத்தை முன்னிட்டு ஒரு குழுவினர் நேற்றிரவு புத்த கொடிகளை தொங்கவிட்டு கொண்டிருந்த போது அங்கு சென்ற பொலிஸார் வீதிப்பகுதிக்கு இடையூறாக இருக்கும் வகையில் கொடிகளை தொங்கவிடவேண்டாம் என தெரிவித்ததாக
கூறப்பட்டுள்ளது
இதன்போது இரு தரப்பினருக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை உருவானதாகவும் குறித்த குழுவினர் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து மோதலை கட்டுப்படுத்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
குழுவினரின் தாக்குதலுக்கு உள்ளான பேருவளை பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உட்பட மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .

