
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை 10 மணி நேர நீர் வெட்டு
கம்ஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
பேஹெலியகொட, வத்தளை, ஜா-எல, சீதுவ நகர சபை பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டான, மினுவங்கொட பிரதேச சபை , கம்பஹா பிரதேசகளின் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
நாளை காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.
பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நிறுவப்பட்ட சூரிய மின்சக்தி அமைப்பை மேம்படுத்துதல் மற்றும் பிரதான அமைப்புடன் இணைப்பதன் காரணமாக நீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
CATEGORIES Sri Lanka

