
காட்டு யானை தாக்கி ஒருவர் பலி
சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிந்தபுர பகுதியில் காட்டுயானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (10) காலை மாட்டினை மேய்ச்சலுக்குச் அழைத்து செல்வதற்காக மாட்டினை தேடிச் சென்றபோது குறித்த நபரை யானை தாக்கியுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் ஈச்சிலம்பற்று – பூநகர் பகுதியை சேர்ந்த 57 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையே ஆவர்.
சடலம் திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

