தேனிலவு சென்ற இடத்தில் கணவனை கொன்ற மனைவி

தேனிலவு சென்ற இடத்தில் கணவனை கொன்ற மனைவி

தேனிலவு சென்ற இடத்தில் கணவனை கூலிப்படை வைத்து கொன்றதாக இளம்பெண் மற்றும் அவரது காதலன் உள்ளிட்ட 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் இந்தியா மேகாலயாவில் பதிவாகியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்சி இவருக்கு சோனம் என்ற பெண்ணுடன் கடந்த மே 11ஆம் திகதி திருமணம் ஆன நிலையில் புதுமணத் தம்பதி தேனிலவை கொண்டாட மேகாலயா சென்றுள்ளனர்.

கடந்த மே 23ஆம் திகதி , மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டம் நாங்ரியட் கிராமத்தில் உள்ள விடுதியில் இருந்து வெளியேறிய தம்பதிகளை காணவில்லை என உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைபாட்டினை அடுத்து மேகாலயா நடத்திய விசாரணைல் பல அதிர்ச்சித்தகவல்கள் வெளியானது.

24-ம் திகதி தேன்னிலவு தம்பதி வாடகைக்கு எடுத்த ஸ்கூட்டரை சோராரிம் என்ற கிராமத்தில் கண்டுபிடித்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் 2-ம் திகதி ராஜா ரகுவன்சியின் உடல் மட்டும் 200 அடி ஆழ பள்ளத்தாக்கில் இருந்து மீட்கப்பட்டது.

கொலைக்கு பயன்படுத்திய கத்தி, ரகுவன்சியின் செல்போன் உள்ளிட்ட சில பொருட்களை கைப்பற்றினர். இதையடுத்து அவரது மனைவி சோனம் என்ன ஆனார் என்ற கேள்வி எழுந்தது.

தம்பதியினர் காணாமல்போன நாளில் அடையாளம் தெரியாத 3 ஆண்களுடன் சோனம் காணப்பட்டதாக உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் கூறியிருந்தார்.

இதில் காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக ஆசைப்பட்டு சோனம் கூலிப்படை அமைத்து ரகுவன்சியை கொலை செய்ததது தெரியவந்தது. மேலும்
அவர் கூலிப்படைக்கு ரூ.20 லட்சம் தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். தொடர்ந்து முன்பணமாக ரூ.4 லட்சத்தையும் வழங்கி உள்ளார்.

இதையடுத்து இக்கொலையில் தொடர்புடைய நால்வரை பொலிஸார் அடுத்தடுத்து கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் தேனிலவு சென்று அங்கு கணைவனை கொலை செய்த சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )