யாழ். மாநகர சபையின் புதிய மேயர் யார் ?

யாழ். மாநகர சபையின் புதிய மேயர் யார் ?

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று நடைபெறவுள்ளது.

45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ்ப்பாண மாநகர சபையில் 23 ஆசனங்களைக் கொண்டிருக்கும் தரப்பே ஆட்சியமைக்க முடியும்.

எனினும், எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டிருக்காத நிலையில், கட்சிகள் கூட்டணிகளை அமைத்து ஆட்சியைக் கைப்பற்ற முயற்சித்து வருகின்றன.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 13 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகியன தலா 4 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றின.

இந்த நிலையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் பதவிக்காகப் போட்டியிடவுள்ளன.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளரை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )